பேரக்குழந்தைக்காய் எழுதும் கவிதை
by Pathiniyan Sujanthan on 09 அக்டோபர் 2010, 04:42 க்கு
என் கவிதைக்கு யாரையும்
கொலை செய்யத் தெரியாது
காயப்படுத்தக் கற்றுக் கொடுக்கவில்லை
வலி பொறுக்கத் தெரியாத கவிதை
விழி பிதுங்கிய படியேபீச்சியடிக்கிறது ரணங்களை
மௌனங்களை அணிந்து கொண்டு
தாளில்அப்பி வைக்கிறது வலிகளை….
என் கவிதை
இதுவரை யாரையும்கொலை செய்யவில்லை
என்ற நம்பிக்கையிலும் சவந்தோசத்திலும்தான்
அழிந்து அழிந்து எழும்பீனிக்ஸ் குருவியாய்
இன்னும் வாழ்கிறேன்…..
சித்தம் தெளியாமல்
கடவாய்ப்பற்களில் ரத்தம் வழிய
நரபலிக்காய்த் துரத்தும் உன்னை
என் கவிதைபின் தொடர்கிறது…..
ஒரு புகைப்படக் காரனைப்போல
புத்தி தெளிந்த பின்
என் கவிதையைப் படி
உன் கழுத்துச் சட்டையைப் பிடித்து உலுப்பும்
மனச்சாட்சியின் சுவர்களிளெல்லாம்ஆணி அடிக்கும்
முகத்தில் காறித்துப்பும்
உன்னை வெளிச்சமிட்டுக் காட்டும்
நீ செய்ததையெல்லாம் பட்டியலிடும்
அன்று வெட்கித் தலை குனிவாய நீ…
இறுதியில்
உன்னையும் என்னையும்
மரணம் விழுங்க
புதிதாய்ப் பிறக்கும் என் பேரக்குழந்தைக்கு
உன்னை அடையாளப்படுத்தும்
அதற்காகத்தான்
உயிரைபிச்சைப் பாத்திரத்தில் சுமந்தபடி
இன்னும்…..செத்துச் செத்து எழுதுகிறேன்
எனது பேரக் குழந்தைக்காக…
No comments:
Post a Comment